Cine Bits
தல ரசிகராக அதர்வா நடிக்கிறார்!

அதர்வா நடிப்பில் அடுத்ததாக பூமராங் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அதர்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் அஜித்குமார் மீது அன்பு கொண்ட தீவிர ரசிகராக அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கதைப்படி, அதர்வா கபடி வீரர் அஜித்குமாரின் தீவிர ரசிகர். அவர் ஆடுகிற ஆட்டம்தான், குருதி ஆட்டம். கதாநாயகி பிரியா பவனி சங்கரின் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. த.முருகானந்தம் தயாரிக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. படத்தை விரைவில் வெளியிட தயாராக இருக்கிறது படக்குழு.