தல ரசிகர்கள் கொண்டாடும் தளபதியின் பிகிலு படம் – கொண்டாடும் ரசிகர்கள் !

விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிகில் படம் குறித்து ட்விட்டரில் கலவையான விமர்சனங்கள் பதிவிட்டு வரப்படுகின்றன. பிகில் படத்தில் ராயப்பன் கேரக்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் கேரியரில் ராயப்பன் கேரக்டர் தான் பெஸ்ட் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். பிகில் படம் பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய் – அட்லி வெற்றிப்பயணத்தில் இந்த படமும் ஒன்று என்று தெரிவித்து வருகின்றனர். ஆக்‌ஷன், காமெடி என விஜய் நடிப்பில் வெளுத்து வாங்கி உள்ள நிலையில் படத்தில் ராயப்பன் கேரக்டர் அனைவரும் நெஞ்சிலும் குடி கொண்டுள்ளது. செண்டிமென்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கும் படத்தில் பஞ்சமில்லை. ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார் விஜய். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு என்று தல அஜித்தின் ரசிகர்களே கொண்டாடுகிறார்கள்.