தல 59 படத்தில் நடிக்கிறேன் – வித்யா பாலன்! தல 59 படத்தில் நடிக்கிறேன் – வித்யா பாலன்!

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். “இந்தப் படத்தில் நான் சிறிய வேடத்தில் நடிக்கிறேன். போனி கபூர் தயாரிக்கிறார். அவர்தான் சிறப்பு தோற்றம் தான் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் உங்களுக்காக நடிக்கச் சம்மதிக்கிறேன் என்றேன். எனக்குப் படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முழுக்க முழுக்க போனி கபூருக்காகவே நடிக்கிறேன்” என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.