தளபதிக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன்!

நடிகர் விஜய்யோடு நடிக்கவேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டு தான் கேட்டிருப்போம். சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூட விஜய்யோடு நடிக்க சான்ஸ் வேண்டும் என ஓப்பனாகவே கேட்டிருந்தார். இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவிற்கு தங்கையாக நடித்திருந்த நடிகை ஜாக்குலின் ஒரு பேட்டியில், “நான் விஜய்க்கு தங்கையாக நடிக்கமாட்டேன்” என கூறியுள்ளார். “அவரை என்னால் பாசமாக பார்க்க முடியாது. அழகா இருக்காரே சைட் தான் அடிக்க முடியும்” என ஜாக்குலின் கூறியுள்ளார்.