தளபதி விஜய்யின் மெர்சலை மிஸ் பண்ணிட்டேன்! வருத்தத்தில் சமந்தா!

தளபதி விஜய்யின் மெர்சல் படத்தில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியானது. அதை பற்றி மொத்த தமிழ் சினிமாவே பேசிக்கொண்டிருந்தது, ஆனால் அதுபற்றி நடிகை சமந்தா ஒரு வார்த்தை கூட ட்விட்டரில் பேசவில்லை. வழக்கமாக ட்விட்டரில் அக்டிவாக இருக்கும் சமந்தா ஏன் இப்படி செய்தார் என ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருந்த வேளையில் அவரே அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தற்போது ஒரு வாரமாக காட்டுப்பகுதியில் ஷூட்டிங் இருந்ததால் அவரின் செல்போனில் டவர் இல்லாமல் போனது தான் காரணம் என இன்று ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.