தளபதி விஜய்யின் மெர்சல் 6 நாள் பாக்ஸ் ஆபிஸில் எந்த இடம் பிடித்துள்ளது தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷல் நாளில் வெளியான படம் மெர்சல். இப்படம்  அட்டகாசமாக வசூலில் கலக்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம் எதிர்க்கொள்ளாத பிரச்சனையே இல்லை. இந்நிலையில் படத்திற்கு பல எதிர்ப்புகள் வருகிறது, அதேசமயம் பலரும் மெர்சல் படக்குழுவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படம் நேற்று (அக்டோபர் 24) சென்னையில் மட்டும் ரூ. 69 லட்சம் வசூலித்துள்ளதாம். மொத்தமாக 6 நாட்களில் ரூ. 7.53 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் தற்போது சென்னையில் அதிகம் வசூலித்த படங்களில் 10வது இடத்தை பிடித்திருக்கிறது விஜய்யின் மெர்சல்.