Cine Bits
தளபதி 63’ படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்!

விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில், பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் நடிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார் விஜய். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் ‘தளபதி 63’ படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘ஆரண்ய காண்டம்’, ‘மாயவன்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஜாக்கி ஷெராஃப், தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’, விக்ரம்பிரபு நடிக்கும் ‘வால்டர்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.