தளபதி 63 படம் பொழுதுபோக்குமிக்க படமாக இருக்கும் – நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். விஜய் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. மெர்சல், சர்கார் படங்களில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தளபதி 63 படம் பற்றி விஜய் கூறியது, இந்தபடம் “வண்ணமயமான, கொண்டாட்டமான படமாக இருக்கும். எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும். கடைசி சில படங்கள் கொஞ்சம் சீரியசாக இருந்தது. படத்தின் இறுதிக்காட்சியில் மீடியா முன்னாடி பேசறது எனக்கே போர் அடிச்சிடுச்சு” என்று பதில் அளித்துள்ளார்.