தளபதி 64 செம்ம மாஸ் தகவல் – விஜய்யின் இணையும் நண்பர்கள் !

இளைய தளபதி விஜய், தன்னுடைய நடிப்பு பயணத்தில் வெற்றிகரமாக 27 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், விஜய்யின் நண்பர்கள் சஞ்சீவ், நாகேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருவது செம்ம மாஸ் தகவல் என்றே கூறலாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும், விஜய்யின் 64 ஆவது படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவரது நண்பர்கள் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். டிகை தேவயானிக்கு ஜோடியாக 'தொட்டாசிணுங்கி' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், நாகேந்திர பிரசாத்.இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில், நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என நிலையான இடத்தை பிடித்து, பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பிரபுதேவாவின் சகோதரரும் ஆவர். மேலும், நடிகர் விஜய் நடித்த 'கில்லி' , 'குஷி' ஆகிய படங்களில் அவருடைய நண்பராக நடித்துள்ளார். தற்போது 15 வருடங்களுக்கு பின், மீண்டும் நாகேந்திர பிரசாத் விஜயுடன் இணைந்துள்ளார். இவரை தவிர சாந்தனு மற்றும் விஜய்யின் பழைய நண்பர் சஞ்சீவ் ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.