தளபதி 64-ல் இணைந்த மற்றுமொரு பிரபலம் அர்ஜுன் தாஸ் !

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘தளபதி 64’ என்று அழைத்து வருகிறார்கள். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் விஜய், விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ் ஆகியார் நடிக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் இப்படத்தில் இணைந்திருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.