தாதா படத்துக்கு ஆலோசனை சொன்ன நிஜ ரவுடிகள் !

அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களை தயாரித்ததுடன் மாயவன் படத்தை இயக்கியவர் சி.வி.குமார். இவர் அடுத்து கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை தயாரித்து இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது, சென்னையில் மூன்று, நான்கு ரவுடி குழுக்களிடம் ஒரு பெண் சிக்கிக்கொள்கிறார். அந்த பெண்ணின் கதி என்னவாகிறது என்பதே கதை. ஹரிதினேஷ் மாஸ்டரிடம் ஆக்‌ஷன் பயிற்சி பெற்றார். ரவுடியிஸம் பற்றிய தகவல்களை சேகரிக்க ஒரிஜினல் ரவுடிகள் இருவரை நேரில் சந்தித்து பேசினேன். இதனால் காட்சிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க முடிந்தது. பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் அமைந்திருக்கிறார். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு. இவ்வாறு இயக்குனர் கூறினார்.