தான் மதுவுக்கு அடிமையாகி இருந்ததாக கூறுகிறார் – ஸ்ருதி ஹாசன் !

தமிழ்ப்படங்கள் போலவே நீண்ட காலமாக தெலுங்குப் படங்களிலும் நடிப்பதை நிறுத்தியிருந்த ஸ்ருதி சமீபத்தில் கோபிசந்த் இயக்கத்தில் ரவி தேஜா படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக ஹைதராபாத் சென்ற அவர் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நேர்காணல் நடத்திய நடிகை லட்சுமி மஞ்சு கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்த அவர் தனது காதல் முறிவு குறித்து விளக்கம் கொடுத்த பின்னர் சில மாதங்களுக்கு முன்பு வரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தான் விஸ்கி என்னும் குடிபோதைக்கு அடிமையாக இருந்ததாகவும் தினமும் அந்தக் குடிக்கு அடிமையாகி உடல் நலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்த போதை பழக்கத்தை விட்டு வெளியே வர தான் பெரும்பாடுபட வேண்டியிருந்ததாகவும் வெளிப்படையாகக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.