திடீரென்று தனது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்திய சமந்தா !

சமந்தா 2010-ல் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். பொதுவாக திருமணத்துக்கு பிறகு நடிகைகளுக்கு அக்காள், அண்ணி வேடங்கள்தான் வரும். ஆனால் சமந்தாவை தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க அழைக்கின்றனர். கவர்ச்சி வேடங்களிலும் தாராளமாக நடிக்கிறார். மன்மதடு-2 என்ற படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க சமந்தாவை அணுகியபோது இதுவரை ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய அவர் ரூ.3 கோடியாக உயர்த்தி கேட்டதாகவும் அந்த தொகையை கொடுத்து சமந்தாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோல் மற்ற படங்களில் நடிக்கவும் ரூ.3 கோடி சம்பளத்தை நிர்ணயித்துள்ளார்.