திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மணிரத்னம் சுஹாசினி

மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்குகிறார். விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் இணைந்து நடிக்கும் வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடிக்கின்றனர். புதிய தோற்றத்தில் அவர்கள் வருகிறார்கள். ஜூலை 19-ந்தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் மணிரத்னம் படப்பிடிப்பு தளத்துக்கு ஒரு விசிட் அடித்துள்ளார். பெரும்பாலும் தான் தயாரிப்பில் பங்குபெறும் படங்களின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று பார்ப்பதை விரும்பாதவர் மணிரத்னம். அப்படியிருக்க அவர் கதை, திரைக்கதை எழுதியிருப்பதால் படம் எப்படி உருவாகிறது என்பதைக் காண தன் மனைவி சுகாசினியுடன் சென்றுள்ளார்.