திடீர் மரணமடைந்த பிரபல இசையமைப்பாளர் – தகவலை டுவிட்டரில் வெளியிட்ட நடிகர் மோகன் ராமன்

இசையமைப்பாளர் ஆதித்யன் தமிழ் சினிமாவில் 22 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபகாலமாக இவர் பிரபல தொலைக்காட்சியில் சமையல் போட்டி நிகழ்ச்சியில் கூட பங்குபெற்றார். இந்நிலையில் இவர் திடீரென்று ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை நடிகர் மோகன் ராமன் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.