திட்டமிட்டதற்கு முன்பே நாகசைதன்யா-சமந்தா திருமணமா?

நாகார்ஜுனா, அமலா ஆகியோரின் மகன் அகில் திருமணம் நின்றதாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தெலுங்குத் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பான தகவல் வெளியானது.ஆனாலும், நாகார்ஜுனா தரப்பிலிருந்து எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தற்போது, நாகார்ஜுனாவின் மூத்த மகனானா நாகசைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் திட்டமிட்டதற்கு முன்பாகவே திருமணத்தை நடத்தி முடிக்க நாகார்ஜுனா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.சமந்தா தற்போது நான்கைந்து தமிழ்ப் படங்களிலும், ஓரிரு தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்தப் படங்களை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த சில மாதங்களில் எவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.