திட்டமிட்டபடி குறித்த தேதியில் வேறொரு இடத்தில நடக்கிறது நடிகர் சங்கத் தேர்தல்!

பல பரபரப்புக்கும், திருப்பங்களுக்கும் நடுவே ஆளுங்கட்சி, ஆளுநர், நீதிமன்றம், காவல்துறை என இருந்த நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி ஜூன் 23ம்தேதி நடக்கவுள்ளது. முன்னதாக, ஜூன் 23ம் தேதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதில் பாதுகாப்புச் சிக்கல் என காவல்துறை சொன்னது. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது பாண்டவர் அணி. அதில் தேர்தலை ரத்து செய்யாமல் வேறொரு இடத்தில் நடத்திக்கொள்ளலாமெனக் கூறியது. சங்க உறுப்பினர் நீக்க விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சங்கங்கள் பதிவாளர்(மாவட்டம்) ரவீந்தரன் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் பாண்டவர் அணி வென்றிருக்கிறது, நேற்று இரவு உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.அதன் இறுதியில் தேர்தலைத் திட்டமிட்ட 23ம் தேதி நடத்தலாம் எனக் கூறியது. தேர்தல் நடந்தாலும், வாக்குகளை அடுத்த உத்தரவு வரும் வரை எண்ணக்கூடாது என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. இதனால் நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தும் இடம் குறித்து இன்று அறிவிக்கப்படும்.