திண்டுக்கல் மாநகராட்சியில் நடிகர் சசிகுமார் தூய்மை இந்தியா திட்ட தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தூய்மை இந்தியா திட்ட தூதராக நடிகர் கமல்ஹாசனை மத்திய அரசு நியமித்தது. இந்த திட்டத்தில் நடிகர்கள் தூதராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். திண்டுக்கல் மாநகராட்சியில், நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரை தூய்மை இந்தியா திட்ட தூதராக நியமித்துள்ளார். இதற்கான அறிமுக விழா நடத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜிவிநய், சசிகுமாரை தூய்மை இந்தியா திட்ட தூதராக அறிமுகப்படுத்தினார். இதில் மாநகராட்சி கமிஷனர் மனோகர், தூய்மை இந்தியா திட்ட அலுவலகர் அனிதா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் சசிகுமார் பேசியபோது இந்த மாநகராசியின் தூய்மை தூதுவர் நான் மட்டும் அல்ல மக்கள் அனைவரும் தூய்மை தூதுவர்கள் தான் என்றும், நம் நகரை சுகாதாரமாக வைத்து கொள்வதற்கு ஒவ்வொருக்கும் பொறுப்பு உள்ளதாகவும், குழந்தைகளுக்கு மக்கும் குப்பை , மக்கா குப்பை என பிரித்து துப்புரவு தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும் என்றும், பெற்றோருக்கள் குழந்தைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்று கூறினார். துப்புரவு பணி கடினம் என்றும், துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன் என்று கூறினார்