தியாகராஜ பாகதவருக்கு பிறகு விஜய்சேதுபதி தான்! மேடையில் அடித்து சொன்ன நடிகர் பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் படத்தில் மட்டுமல்ல எப்போதும் தான் பேசும் விசயங்கள் பல விசயங்களை குறிப்பிட்டு பேசுவார். அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது. அது சில நேரங்களில் ரசனையாக இருக்கும். அண்மையில் பிரேம் குமார் இயக்கத்தில் வந்த விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் 100 வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர் கலந்துகொண்டு மேடையில் பேசினார். இதில் அவர் விஜய் சேதுபதி இப்போது மக்களுக்கு மிகவும் பிடித்தவராக இருக்கிறார். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு. இதே போல அந்த காலத்தில் பிரபல நடிகர் எம்.கே.டி.தியாகராஜ பாகதவர் சூப்பர் ஸ்டாராக இருந்தார். அதிலும் அவர் 4 சூப்பர் ஸ்டார்களுக்கு சமம் என கூறினார். அதற்கு அடுத்த படியாக விஜய் சேதுபதிக்கும் இருக்கிறது என பார்த்திபன் பேசினார்.