தியேட்டர் ஸ்டிரைக்: அபிராமி ராமநாதன்

இந்தியா முழுவதும் ஒரே வரியான ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் இன்று முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்படுகின்றன. கோரிக்கை நிறைவேறும் வரை, தியேட்டர்கள் செயல்படாது என தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளதால் சினிமா தியேட்டர்கள் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 1,000 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது .

இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரை அபிராமி ராமநாதன், பன்னீர் செல்வம், டி.சிவா உள்ளிட்டவர்கள் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், “தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கையை ஆவணம் செய்வதாக அமைச்சர் உறுதியளித்திருக்கிறார். அரசு நல்ல முடிவு எடுக்கும் பட்சத்தில் தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும். இல்லையேல் எங்களது போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார்