திரிஷாவும் நயன்தாராவும் என்னிடமிருந்து நல்லவேளை தப்பி விட்டார்கள்- பார்த்திபனின் கலகல பேச்சு!

'96' படத்தின் 100 -வது நாள் விழாவில் வழக்கம்போல் நடிகர் பார்த்திபன் தனது கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். அதில் நடிகை நான் முதன்முறையா திரிஷாவைப் பார்க்கும்போது நடிக்கிறீங்களா?னு கேட்டேன், மாட்டேனு சொல்லிட்டாங்க.  அதுல தப்பிச்சவங்கதான் திரிஷாவும் நயன்தாராவும், காதலிக்கிறதுக்கு காதலியோ காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும். 'யமுனை ஆற்றிலே' பாடலோட ஒரிஜினல் வெர்ஷனைவிட இந்தப் படத்துல அந்தப் பாட்டு எப்போ வரும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு இயக்குநருடைய காலை தொட்டு கும்பிடணும்னு நினைச்சேன். இந்தப் படத்துல இருக்கிற ஃப்ரேம் எல்லாமே பிரேம்தான் இருக்கார். விஜய்சேதுபதிக்கு பெண்கள் மத்தியில் அப்படியொரு ஈர்ப்பு இருக்கு. அதுதான் எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு. சில படங்களுக்கு மட்டும்தான் த்ரிஷா இல்லைனா நயன்தாரா. அவங்க நடிச்சிருக்க மாதிரியே தெரியலை. ஆனா, இந்தப் படத்துக்கு திரிஷா இல்லைனா த்ரிஷா மட்டும்தான். இளையராஜா 75 கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாதது குறித்துப் பேசிய அவர், “பொதுவாக ஆணுக்கோ பெண்ணுக்கோ ஆசைப்படுறது ஒரு இடம்; வாழ்க்கைப்படுறது வேற ஒரு இடமா இருக்கும். அது மாதிரி இந்த இளையராஜா சார் விழாவுல போட்டுக்கிறதுக்காக ஒரு மாசம் முன்னாடியே இந்த சட்டையை மியூசிக்கல் சிம்பள் எல்லாம் வெச்சு காதலோடு ரெடி பண்ணது. ஆனா, ஒரு சில காரணங்களால நான் அங்கே போகலை. அந்த சட்டையோடு இங்கே வந்திருக்கேன்” எனத் தெரிவித்தார்.