Cine Bits
திரிஷா, சிம்ரன் இணையும் படம் ‘சுகர்’

தமிழ் திரையுலகின் சீனியர் நடிகைகளான சிம்ரனும், திரிஷாவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். அதிரடி ஆக்சன் கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ‘சுகர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்ரனும், திரிஷாவும் சகோதரிகளாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார்.