திருட்டுப்பயலே ஜீவன் நடிக்கும் அறிவியல் சார்ந்த திகில் படம் – அசரீரி !

‘காக்க காக்க’ படத்தில் பயங்கர வில்லனாகவும், ‘நான் அவனில்லை,’ ‘திருட்டுப்பயலே,’ ‘தோட்டா’ உள்பட பல படங்களில் கதைநாயகனாகவும் நடித்தவர், ஜீவன். ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். ஜி.கே. என்ற புதுமுக டைரக்டர் இயக்குகிறார். அவர் படத்தைப்பற்றி கூறியதாவது அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் சார்ந்த திகில் படம் என்றார். இன்னும் கதாநாயகி முடிவாகவில்லை.