திருட்டு வி.சி.டி.க்கு பயம் காட்டிய பாகுபலி 2!

பாகுபலி 2 தமிழ்,தெலுங்கு,ஹிந்தியில் ரிலீஸ் ஆகி வசூல் சாதனை படைத்து வருகிறது.படம் வந்த அன்றே இன்டர்நெட்டில் வெளியானது அறிந்தும் தயாரிப்பு தரப்பு பதட்டமடையவில்லை. பாகுபலி படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து கொண்டுதான்இருந்தன. இணையத்தில் படத்தைப் பதிவிறக்கம் செய்தவர்கள் குடும்பத்தோடு தியேட்டருக்கு படம் பார்க்க கிளம்பினார்கள்.திருட்டு வி.சி.டி. பாகுபலி 2 படத்தை தியேட்டரில் பார்க்கதூண்டும் 'டெமோ'வாக மாற்றியதற்கு காரணம் படத்தின் பிரம்மாண்டம்.தியேட்டரில் போய் பாகுபலியை பார்த்தால் மட்டுமே பிரம்மாண்டத்தை உணர முடியும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது.