திருநங்கையாக உருமாறி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் அங்காடி தெரு மகேஷ் !

கடந்த 2010ம் ஆண்டு  இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். படத்தின் நாயகன் மகேஷ் படவாய்ப்புகள் அவ்வளவாக இல்லாமல், அவர் குறித்து எந்த தகவலும் சினிமா வட்டாரத்தில் இல்லாதிருந்த நிலையில் தற்போது அவர் 'தேனாம்பேட்டை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் இளைஞராகவும், திருநங்கையாகவும் நடித்து வருகிறாராம்.  எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட காமெடிய பிரபலங்கள்  நடித்துள்ள இத்திரைப்படத்திற்காக மகேஷ் திருநங்கையாக மாறியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரின் கண்களை கவர்ந்துள்ளது.