திரும்பவும் வெள்ளித்திரையில் நடிக்கவருகிறார் நக்மா!

1990- களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்த நக்மா காங்கிரசில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். நீண்ட காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 2002-ல் ஒரு தெலுங்கு படத்தில் ஆர்த்தி அகர்வாலுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2007 வரை பெங்காலி, போஜ்பூரி, இந்தி படங்களில் நாடிருக்கிறார் அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளார். எல்லா மொழி படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது 2 தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் ஒரு படத்தில் அல்லு அர்ஜுன் அம்மாவாக நடிக்கவுள்ளார் படத்தை திரி விக்ரம் இயக்குகிறார். தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடிக்கவும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன்.”எனவும் அவர் கூறியுள்ளார்.