திருவாரூரில் இன்று இடைத்தேர்தல்.. வேட்புமனு தாக்கல் துவங்குகிறது!

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கவிருக்கிறது.
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இயற்கை எய்தினார். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்கவிருக்கிறது, மேலும் முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக, அமமுக போன்ற முக்கிய காட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது போட்டியிடுகிறார். அவர் விரைவில் வேட்புமனுத்தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 10 ஆகும். வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.