திரைக்கு வரவிற்கும் ஸ்பைடர் மேன்

அவெஞ்சர்ஸ் என்ட் கேம் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களின் வசூல் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுபோல் ஸ்பைடர்மேன் சூப்பர் ஹீரோ படத்துக்கும் வரவேற்பு உள்ளது. இந்த படங்களை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெரிதும் ரசிக்கிறார்கள். 2017-ல் வெளியான ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் படத்தின் அடுத்த பாகமாக ஸ்பைடர்மேன் பார் பிரம் ஹோம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ஸ்பைடர்மேனாக டாம் ஹாலாந்த் நடித்துள்ளார். ஜேக் ஜில்லன்ஹால் வில்லனாக வருகிறார். ஜான் வாட்ஸ் இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லருக்கு இந்திய ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து ஒருநாள் முன்னதாக 4-ந் தேதியே வெளியிடுகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுகின்றனர். இந்த படத்துக்கான டிக்கெட் முன்பதிவை வருகிற 30-ந் தேதி தொடங்கி விடுவோம் என்று பட நிறுவனம் அறிவித்து உள்ளது.