திரைக்கு வர தயாராக இருக்கும் கடாரம் கொண்டான் !

ராஜேஷ் செல்வா இயக்கும் இந்த படத்தை ராஜ் கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக வருகிறார். விக்ரமின் முதல் தோற்றம் கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் கமல் மகள் சுருதிஹாசன் ஒரு பாடலை பாடி உள்ளார். படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து டப்பிங், இசைகோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்தன. படத்தின் டிரெய்லர் நாளை (3-ந்தேதி) வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். கடாரம் கொண்டான் 3 வாரங்களில் திரைக்கு வர உள்ளது.