திரைத்துறையை கதறவிடும் தமிழ்ராக்கர்ஸ்- ஒரு பார்வை!

1957-ம் ஆண்டு இயற்றப்பட்ட காபிரைட் சட்டப்படி, செக்‌ஷன் 63, 63-ஏ, 65, 65-ஏ ஆகிய சட்டப்பிரிவுகளின்படி இணையதளங்களின் படங்களை வெளியிடுவது குற்றம். ஆனால் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களை பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. Tamilrockers .com, tamilroc.co, tamilroc.cl, tamilrockers .Net, tamilrockers-s .co, tamilrockers .ph, tamilrockers .mu,tamilrockers .by,tamilrockers .cl,tamilrockers .li, tamilrockers .tv, tamilrockers .pm, tamilrockers .ax, tamilrockers.gs, tamilrockers .vc, tamilrockers .ro, tamilrockers.hn என பல எக்ஸ்டென்ஷன்களில் இத்தளம் இயங்கி வருகிறது. வெளியான அன்றே சில மணி நேரங்களில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் வெளியிடுவதால் திரை உலகினருக்கு பெரும் தலைவலியாக இருக்கின்றது. திருட்டு இணையதளங்களை கட்டுப்படுத்த முடியாமல் திரை உலகினர் திணறி வருகின்றனர். இதனால் திரை உலகில் பெரும் சிக்கலும், பிரச்னைகளும் எழுந்து வருகின்றன.