திரையுலகை பொறுத்தவரை நான் இன்றும் மாணவி தான் – பூஜா ஹெக்டே

மிஸ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தில் ஜீவாவுடன் நடித்த பூஜாஹெக்டே தற்போது 3 தெலுங்கு படங்கள், 1 ஹிந்திப் படம் என நடித்து வருகிறார். ரண்பீர் கபூருடன் இணைந்து நடித்த விளம்பரப்படம் மூலம் திரைக்கு வந்த இவரது பல படங்கள் தோல்வியடைந்துள்ளன. என்னுடைய குடும்பம் திரையுலகத்துடன் தொடர்பு கொண்டதல்ல. திரையுலகை பொருத்தவரை நான் இன்னும் மாணவிதான். தோல்விதான் நல்ல படங்களை தேர்வு செய்ய உதவுகிறது. பாகுபலி' பிரபாஸுடன் இப்போது நான் நடித்து வரும் படத்தின் கதை என் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளது என்கிறார் பூஜாஹெக்டே.