திறமையின் ஒட்டுமொத்த உருவம் தான் அஜித் – காஜல் அகர்வால் புகழாரம்

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய​ நடிகர்களானகளான அஜித், விஜய் ஆகியோர்களின் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் காஜல் அகர்வால்.இந்நிலையில் தற்போது அஜித்துடன் 'விவேகம்' படத்திலும், விஜய்யுடன் 'தளபதி 61' படத்திலும் நடித்து வரும் காஜல், அவ்வப்போது இருவருடனும் நடிக்கும் அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது 'விவேகம்' படத்தில் காஜல் அகர்வால் கெட்டப்புடன் கூடிய ஸ்டில் ஒன்று சற்றுமுன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்துடன் காஜல் அகர்வால் அஜித் குறித்து கூறிய ஒரு வரியும் இணைந்து டிரெண்ட் ஆகியுள்ளது. 'திறமையின் ஒட்டுமொத்த உருவம்தான் அஜித்' என்று காஜல் அகர்வால் அஜித் குறித்து பெருமையுடன் கூறியுள்ளார்.