திறமை இல்லாத வாரிசு நடிகர்களால் நிலைக்க முடியாது – கல்யாணி ப்ரியதர்ஷன்

டைரக்டர் பிரியதர்‌ஷன் – நடிகை லிசியின் மகள் நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் கூறும்போது, சினிமாவில் நான் வாரிசு என்பதால் மட்டும் நீடிக்க முடியாது. எனது அம்மா, அப்பாவுக்கு சினிமாவில் இருக்கும் பெயரும் புகழும் என்மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். நான் எப்படி நடிக்கிறேன் என்று கவனிப்பார்கள். திறமை இருப்பவர்கள் சினிமாவில் நீடிப்பது சுலபம். வாரிசுகளுக்கு முதல் வாய்ப்புகள் வரும். வாரிசாக இல்லாதவர்கள் சுமாராக நடித்தாலும் பாராட்டுவார்கள் எனவே வாரிசு நடிகர் – நடிகை என்பது பெரிய பாரம்’’ என்றார்.