தீபாவளிக்கு மோதும் விஜய் தனுஷ்

விஜய்யின் பிகில் தீபாவளிக்கு வரவிருக்கையில் இப்போது தனுஷ் நடிக்கும் பட்டாசு படத்தையும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 2 பெரிய படங்கள் வருவதால் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது. பிகில் படத்தில் விஜய் தந்தை, மகன் என்று இரு வேடங்களில் வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லி இயக்குகிறார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். சென்னையில் கால்பந்து மைதானத்தை அதிக செலவில் அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த படத்துக்கு இப்போது ‘பட்டாசு’ என்ற பெயர் வைத்து முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். படவேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் மெஹ்ரின் பிரசிதா, சினேகா, ஆகியோரும் நடிக்கின்றனர். அதிரடி படமாக தயாராகி உள்ளது.