துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடிக்கிறார் – திரிஷா !

திரிஷா தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக, அவர் தலைமுடியின் நீளத்தை குறைத்துக் கொண்டு புதிய சிகை அலங்காரத்துடன் காணப்படுகிறார். இதையடுத்து அவர் எம்.சரவணன் டைரக்‌ஷனில், இன்னொரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். படத்துக்கு, ‘ராங்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் நிறைய சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள்ளன. கதை-வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.