துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கதிர்!

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து கதிர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சத்ரு’. ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகு குமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார் மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நவீன் நஞ்சுண்டான் இயக்கி இருக்கிறார்.  ‘இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இதன் கதை. விறுவிறுப்பான திரைக்கதை, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்த படம் இது. குற்றவாளிகளாக, யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது’ என்றார்.