Cine Bits
துணை இயக்குனரிடம் கோபம் அடைந்த நயன்தாரா – தளபதி 63 படப்பிடிப்பில்!

நடிகை நயன்தாரா தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி63 படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் வடசென்னையில் உள்ள ஒரு இடத்தில் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் முன் அனுமதி பெறாமல் நயன்தாராவை பார்க்க துணை இயக்குனர் ஒருவர் சென்றுள்ளார். உங்களிடம் கதை சொல்ல வேண்டும் என பேச ஆரம்பித்துள்ளார். இதற்குமுன் நயன்தாரா நடித்த ஒரு படத்தில் அவர் பணியாற்றியிருந்தாலும், அவரை பார்த்தவுடன் நயன்தாராவிற்கு அதிர்ச்சி. காரணம் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி அவர் உள்ளே வந்தார் என்பது தான். உடனே ஜிம் பாயிஸுக்கு சொல்லி அந்த துணை இயக்குனரை வெளியே துரத்தி அனுப்பிவிட்டாராம். அந்த இயக்குனர் நன்றாக பழகியவரிடம் இப்படியா நடந்து கொள்வது என்று புலம்பிக்கொண்டே சென்றாராம்.