துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கவிற்கும் அஜித் !

நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற வி‌ஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டும் அஜித் கோவையில் நடைபெற இருக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த வார இறுதியில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கடந்த பொங்கல் அன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம், அவரது சினிமா வாழ்க்கையிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ளது. அதை தொடர்ந்து, அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.