துல்கர் சல்மானின் 25 வது படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஃபர்ஸ்ட் லுக் !

துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். அவரது நடிப்புத்திறன் அவரை மற்ற மொழிகளிலும் கொண்டு சேர்த்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பன்மொழிகளிலும் நடிக்கிறார். தமிழில் “வாயை மூடிப் பேசவும்” படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்தார். அதன் பிறகு நேரடி தமிழ் படம் எதிலும் நடிக்கவில்லை. இப்போது அவர் நடிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் காதல்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட லுக் வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.