துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பிரியா பவனி சங்கர்!

சின்னத்திரையில் பிரபலமான பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படம் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக கவனம் பெற்ற இவர், கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். இவரது நடிப்பில் மான்ஸ்டர், குருதி ஆட்டம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்கும் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ரா.கார்த்திக் இயக்க இருக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.