தெகிடி அசோக் செல்வன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி !

அஸ்வத்  மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன்  நடிக்கும் படம், ஓ மை கடவுளே. விது அயன்னா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இடைவிடாமல் நடந்து வருகிறது. இந்நிலையில், முக்கிய கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடி கிடையாது. இளம் வயது அசோக் செல்வன்  ஜோடியாக வாணி போஜன், நடுத்தர வயது அசோக் செல்வன் ஜோடியாக ரித்திகா சிங்  நடிக்கின்றனர்.