தென்னிந்தியாவில் கதாநாயகிகளை ராணி மாதிரி பார்க்கிறார்கள் – நடிகை டாப்சி!

திரையுலகம் கதாநாயகிகளுக்கு சாதகமாக இருக்கிறது. முன்பெல்லாம் கதாநாயகர்களை மனதில் வைத்து கதைகளை தயார் செய்தனர். ஆனால் இப்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி படங்கள் எடுக்கிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம். இந்தியில் எனக்கு நல்ல படங்கள் வருகிறது. முல்க், பிங்க், பட்லா உள்பட நான் நடித்த படங்கள் நன்றாக ஓடின. தென்னிந்தியாவில் கதாநாயகிகளை ராணி மாதிரி பார்க்கிறார்கள். எதிர்காலத்தில் பெண் தொழில் அதிபராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இவ்வாறு டாப்சி கூறினார்.