தென்னிந்திய சினிமா: மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம்…

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டிஜிட்டல் சேவை வழங்கும் கியூப் மற்றும் யுஎப்ஓ நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை  குறைப்பது, அல்லது அதற்கு மாற்று  ஏற்பாடுகள் செய்வதற்காக வருகிற மார்ச் 1ம்  தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐதராபாத்,சென்னையில் தமிநாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பிலிம் சேம்பர் நிர்வாகிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை.இன்று  பெங்களுரில் பேச்சுவார்த்தை நடந்தது ஆனால் அதிலும் எந்த முடியும் எடுக்கவில்லை என்பதால் தென்னிந்திய சினிமாக்கள் அனைத்தும்  மார்ச் 1 ம் தேதி  முதல் புதிய படங்கள் வெளியாகாது என அறிவித்துள்ளனர்.