தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை – பாகவதருக்கு மணி மண்டபம் !

தமிழ் சினிமாத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் எம்.கே.டி என்று போற்றப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர்  சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.