தென்னிந்திய நடிகர் நடிகைகளை பாராட்டிய தபு !

பாலிவுட் நடிகையாக இருந்தாலும் தென்னிந்திய ரசிகர்களுடனும், நட்சத்திரங்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருப்பவர் தபு. இவர் தமிழில், சிறைச்சாலை, சிநேகிதியே, இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், டேவிட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது,  நான் பதிவிட்டிருக்கும் இப்புகைப்படத்தில் உள்ள நடிகர், நடிகைகள் எனது நண்பர்கள் மட்டுமல்ல இந்திய திரையுலகில் மறக்க முடியாத பல்வேறு படங்கள் தந்தவர்கள். குஷ்பு, நதியா, ராதிகா, சுகாசினி, மீனா, ஜெயசுதா போன்றவர்களுடன் ஒன் அண்ட் ஒன்லி மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுடன் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.