தென்னிந்திய படங்கள் பிடிக்கும் – சல்மான்கான் !

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம் படங்களை விரும்பி பார்ப்பேன். வட இந்தியாவில் தென்னிந்திய படங்கள் அதிக வசூல் குவிக்கின்றன. பாகுபலி, கே.ஜி.எப் போன்ற படங்கள் பெரிய வசூல் ஈட்டியது. தமிழில் விஜய் நடித்த போக்கிரி படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடித்தேன். அவர் நடிப்பில் வந்த தெறி, திருப்பாச்சி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது நான் நடித்துள்ள தபாங்-3 எனக்கு முக்கிய படம். இது தென்னிந்திய படம் போலவே இருக்கும். இந்த படத்தில் தென்னிந்திய கலைஞர்கள் அதிகமானோர் வேலை செய்துள்ளனர். பிரபுதேவா இந்த படத்தை இயக்கி இருப்பது வெற்றிக்கு உறுதி அளிப்பதுபோல் அமைந்துள்ளது. எனது அடுத்த படத்தையும் அவர்தான் இயக்குகிறார் இவ்வாறு சல்மான்கான் கூறினார்.