தென்னிந்திய SIMA திரைப்பட விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 15, 16 -ல் நடைபெறுமென அறிவுப்பு !

தென்னிந்திய திரைப்பட விருதுகளை வழங்கும் சைமா விருது விழா நடைபெறுகிறது. 8வது சைமா விருது விழா ஆகஸ்ட் 15, 16ம் தேதிகளில் கத்தார் தோஹாவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மஞ்சிமா மோகன், இவானா, அமிர்தா அய்யர், ரைசா வில்சன், இயக்குனர் விஷ்ணு வர்தன், விப்ரி மீடியா நிர்வாக இயக்குனர் இந்தூரி, தென்னிந்தியாவின் வணிகத் தலைவர் விஸ்வசேதன் ஆகியோர் கலந்து கொண்டனர். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் தமிழில் 96 – 10 பரிந்துரைகள், கோலமாவு கோகிலா – 7 பரிந்துரைகள், வட சென்னை – 6 பரிந்துரைகளில் உள்ளது. தெலுங்கில் ரங்கஸ்தலம் – 12, மகாநதி – 9, கீதா கோவிந்தம் – 8, அரவிந்த சமேதா – 6. மலையாளத்தில் சூடானி ஃப்ரம் நைஜீரியா – 9, வரதன்- 6, அரவிந்தந்தே ஆதிதிகல் – 5, பூமரம் – 5. கன்னடத்தில் கேஜிஎஃப் – 12, தாகரு – 11, சர்க்காரி ஹாய் – 10 என போட்டியில் உள்ளன.