தெறி’ படத்தில் தவழும் குழந்தையாக நடித்த பாப்பா எவ்வளவு பெருசா வளந்துட்டாங்க பாருங்க !

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த முதல் திரைப்படம் 'தெறி'. காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகி இருந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே படத்தில், நைனிகாவின் குழந்தை பருவ கதாப்பாத்திரத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ஒரு பெண் குழந்தை. குறு குறு பார்வை, மழலை சிறப்பு என ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் பல ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர் தற்போது எப்படி உள்ளார் என்கிற புகைப்படம் வெளியாகி, ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மிகவும் சிறு குழந்தையாக இருந்த இவர், நான்கு வயது குழந்தையாக வளர்த்துள்ளார்.