தெறி படத்தை பார்த்து அழுத நாகசைதன்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் சமந்தா தனது காதலர் நாகசைதன்யாவுடன், தான் விஜய்யுடன் நடித்த 'தெறி' படத்தை பார்த்துள்ளார். இந்த படத்தின் ஒரு காட்சியில் சமந்தா மரணம் அடையும் காட்சி உள்ளது. இந்த காட்சியை பார்த்த நாகசைதன்யா தியேட்டரிலேயே அழுததாக சமந்தா கூறியுள்ளார்.

மேலும் தான் நடித்த பல கேரக்டர்களில் 'தெறி' படத்தில் நடித்த மித்ரா கேரக்டர் ரொம்பவே ஸ்பெஷல் கேரக்டர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.