தெலுங்கில் மெர்சல் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜயின் மெர்சல் படம் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது சுமார் ரூ 200 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து மெர்சல் சில வாரங்களுக்கு முன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் டப் செய்து ரிலிஸ் செய்தனர். விஜய்க்கு தெலுங்கில் இதுவரை பெரிய மார்க்கெட் இல்லை. மெர்சல் படத்திற்கு அங்கும் நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்தது, முதல் வார இறுதியில் தெலுங்கில் ரூ 8 கோடி வரை மெர்சல் வசூல் செய்தது. ஆனால், தற்போது வசூல் மிகவும் குறைந்து வருகின்றதாம், இதனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடைய வாய்ப்பில்லை என தெலுங்கு பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.